வவுனியாவில் வடமாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கத்தால் உதவிகள் வழங்கி வைப்பு

வவுனியா குடியிருப்பு தாயகம் அலுவலகத்தில் வடமாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வடமாகாணசபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட 11 விளையாட்டுக்கழகங்களுக்கு புல்லு வெட்டும் இயந்திரம் மற்றும் சுயதொழிலினை மேற்கொள்ளும் பெண்களுக்கு 3 தையல் இயந்திரம் என்பன ப. சத்தியலிங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like