பாடசாலை வளாகத்தில் மதுபான உற்பத்தி: ஒருவர் கைது!

ஹிங்குரகொட பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் வளாகத்தில் மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே இந்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே நேற்று இரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர், அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மினுவங்கொட பகுதியில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேகநபர் இன்றைய தினம், மினுவங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

You might also like