வவுனியாவில் தற்கொலைகளை தடுக்க பொலிசாரினால் விழிப்புணர்வு நிகழ்வு

வவுனியாவில் அதிகரித்துவரும் தற்கொலைகளை தடுப்பதற்கு ‘மனிதனை நம்பாதே தற்கொலை செய்யாதே’ எனும் தொனிப்பொருளில் வவுனியா பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டு முச்சக்கர வண்டிகளில் ஸ்ரிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (23.08.2018) நடைபெற்றது.

ஈசி மிசன் சுவிசேச சபையின் தலைமை போதகர் ராஜசிங்கம் தலைமையில் 400 முச்சக்கர வண்டிகளுக்கு தற்கொலைகளை தடுக்கும் ஸ்ரிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.எஸ். தென்னக்கோன், பொலிஸ் நிலையத்தின் பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

You might also like