வவுனியாவில் பேரூந்து நடத்துடனர் மீது தாக்குதல் : தனியார் வங்கி உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (25.08.2018) அதிகாலை 3.00மணியளவில் தனியார் பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் வங்கியில் உத்தியோகத்தர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தரித்து நின்ற சமயத்தில்  நடத்துனர் அதிகளவு கட்டணம் பெற்றுள்ளதாக தெரிவித்து நடத்துனர் மீது  அப் பேரூந்தில் பயணம் மேற்கொண்ட தனியார் வங்கியின் உத்தியோகத்தர் , அரச உத்தியோகத்தர் உட்பட மூவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இத் தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவரையும் கைது செய்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like