வவுனியாவில் நல் நிலைக்கான நடைபயணத்தின் நிறைவு நாள் நிகழ்வு

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் “நல் நிலைக்கான நடைபயணம்”எனும் தொனிப்பொருளில் உள ஆரோக்கியத்தை வலியுறுத்தி கடந்த 21ம் திகதி மன்னாரின் ஆரம்பித்த நடைபயணம் 25 ம் திகதி சனிக்கிழமை காலை குருக்கர்புதுக்குளத்தில் இருந்து பூவரசன்குளம் வரையும் மாலை பூவரசன்குளத்தில் இருந்து பம்பைமடு ஆயுள்வேத வைத்தியசாலை வரையும் இடம்பெற்று முடிவடைந்தது இந்த நடை பயணத்தில் பாவற்குளம்,தட்டான்குளம்,சண்முகபுரம், கற்குளம், செக்கடிப்புலவு மற்றும் பம்பைமடுவை சேர்ந்த பல மக்கள் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மறுநாள் 26 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு தொழிநுட்ப கல்லூரியில் ஆரம்பித்த நடைபயணம் வவுனியா பேரூந்து நிலையத்தை வந்தடைந்தது நிறைவுநாள் நிகழ்வு காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.

இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக வைத்திய அதிகாரி-உளநலம், வைத்திய கலாநிதி சுதாகரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு நல் நிலைக்கான நடைபயணத்தின் நோக்கம் தொடர்பான தனது கருத்துரைகளையும் வழங்கினார்.

அவர் தனது கருத்துரையில் உள நலத்தின் அவசியம் மற்றும் அதன் தேவைப்பாடு தொடர்பாகவும் விளக்கியிருந்தார்.

இறுதியாக இந்த ஆறு நாள் நடை பயணத்தில் உறுதுணையாக இருந்த சகலருக்குமான நன்றி தெரிவித்தலை குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் -வடக்கு, திரு. ச. எமிலியான்ஸ்பிள்ளை அவர்கள் தனது நன்றியுரையில் வழங்கினார்.

குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் தலைமைக்காரியாலய உத்தியோகத்தர்கள், வட மாகாண அலுவலக உத்தியோகத்தர்கள் கிராம மட்ட குழுக்கள், மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like