வவுனியா புளியங்குளத்தில் மாட்டுடன் மோதுண்டு கார் விபத்து : மாடு பலி

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (28.08.2018) மாலை 7.00 மணியளவில் மாட்டுடன் மோதுண்டு கார் விபத்துக்குள்ளானது.

வவுனியாவிலிருந்து ஏ9 வீதியுடாக யாழ் நோக்கி பயணித்த கார் புளியங்குளம் 205ம் மைல் கல் க்கு அருகே மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் விபத்துக்குள்ளாகிய மாடு சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்தது.

காரில் பயணம் மேற்கொண்டவர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் காரின் முற்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

You might also like