இலங்கையிலும் கணனி துறையில் தொழில் வாய்ப்புக்கள் பாரிய வீழ்ச்சி

உலக நாடுகளில் ஏற்பட்ட நவீன இயந்திரவியல் முறையின் மூலம் உலக அளவில் பல கணனி மென்பொருள் வல்லுனர்கள் (software engineers) மற்றும் கணனி துறை சார்ந்தோருக்கான வேலை வாய்ப்புக்கள் குறைவடைந்து செல்வதாக பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

இதன் வெளிப்பாடாக இலங்கையிலும் பல கணனி துறை சார்ந்த வல்லுனர்கள் தொழில் வாய்ப்பினை இழக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கொழும்பில் இயங்கி வரும் பல IT நிறுவனங்களும் தற்போது தமது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றமை அவதானிக்க முடிகிறது

அத்துடன் இந்த நிறுவனங்கள் தமக்கு தேவையான குறைந்த பட்ச ஊழியர்களையும் பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த சம்பள அடிப்படையில் பணிக்கு எடுத்துள்ளதாகவும் அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதனால் இலங்கையின் தொழிநூட்ப துறையில்( ஐ.டி)  பாரிய வேலையிழப்புக்கள் ஏற்பட இருப்பதாகவும் கணித்துள்ளனர்

You might also like