வவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் படுகாயம் (படங்கள் இணைப்பு)

வவுனியா பட்டானிச்சூர் முஸ்லீம் படசாலைக்கு முன்பாக  இன்று (11.03.2017) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து மன்னார் வீதியூடாக  பயணித்த  மோட்டார் சைக்கிள் முஸ்லீம் பாடசாலைக்கு முன்பாக திரும்ப முற்பட்ட போது எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதுண்டதில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த முச்சக்கரவண்டி வீதியின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிலுக்கு சிறு சேதம்  ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிலின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like