வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.ச சபையினர் பணிப்புறக்கணிப்பு

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (04.09.2018) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடிப்படை சம்பளத்தினை 27500 ரூபாவாக உயர்த்து , மேலதிக சம்பளமான 10,000 ரூபாவை அடிப்படை சம்பளத்துடன் சேர் , 03/2006 சுற்றுநிறுபத்தின் படி சம்பளத்தை அதிகரி, கல்வித்தகமைக்கு முன்னுரிமை அளித்து பதவி உயர்வை வழங்கு , ஒப்பந்த அடிப்படை ஊழியர்களுக்கு நிரந்தர பதவியை வழங்கு , சாரதி மற்றும் காப்பாளரின் கைவிரல் அடையாள பதிவினை இரத்துச்செய் , உயர்ந்த போக்குவரத்து தண்டத்தை இரத்துச்செய் , சீரான போக்குவரத்து சேவையை செயற்படுத்துவதற்கு புதிய பேரூந்துகளையும் சாரதி காப்பாளர்களையும் தந்துதவு என்ற எட்டு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குவதுடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

தனியார் பேரூந்துகள் அதிகளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like