கிளிநொச்சியில் இருபதாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும்தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை 20 ஆவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காணாமல்  ஆக்கப்பட்டவர்களின்  விடயத்தில்  இனியும் காலம் தாமதிக்க வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்து போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இரவு பகலாக தொடர் போராட்டங்களில்  ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் இருபதாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட  கிளிநொச்சியில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டத்தில் மகனை,மகளை,பிள்ளைகளை கணவனை,சகோதரனை  தேடிக்கொண்டிருப்பவர்கள் வயோதிப நிலையிலும்,நோய் வாய்ப்பட்ட நிலையிலும்  மருந்து மாத்திரைகளுடன்  த ங்களின் உறவுக்கான போராட்டத்தில் கலந்கொண்டுள்ளனர்.

You might also like