40 ஆண்டு காலப் பாதிப்புக்களுக்கு விரைவில் தீர்வு வருமா? எதிர்பார்த்து காத்திருக்கும் உருத்திரபுரம் மக்கள்

கிளிநொச்சி உருத்திரபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள 3 ஆம், 4 ஆம் குறுக்கு வீதிகளின் நிலைமை மிக மோசமான காணப்பட்டு வருகிறது.

துவிச்சக்கர வண்டிகளில் கூட பயணம் செய்ய முடியாத அளவிற்கு மரணத்தை உண்டு பண்ணும் ஆழமான குழிகளை கொண்ட வீதிகளாகவே காணப்படுகின்றது.

இதனால் இப்பகுதியில் வாழ்கின்ற 200 இற்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய விவசாயத்தொழிலை மேற்கொள்வதிலும் பாடசாலைக்கு பிள்ளைகளை பாதுகாப்பாக அனுப்புவதற்கு அஞ்சும் நிலை காணப்படுகின்றது.

வடமாகாணத்திலேயே மிக மோசமான வீதிகளாக இவ்வீதிகளே இருக்க முடியும் என்பது பலரது கருத்தாக இருக்கும் நிலையில். இவ்வீதிகளின் புனரமைப்பு தொடர்பில் எந்த முன்னேற்றங்களும் அண்மைக்காலம் வரை ஏற்படவில்லை.

இந்த நிலைமை தொடர்பில் அண்மையில் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அப்பகுதிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேரில் நிலைமைகளை பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளுக்கும் இவ்விடயத்தை எடுத்து சென்றார்.

அதனை தொடர்ந்து, நீர்பாசன எந்திரி சுதாகரன், பிரதேசெயலாளர் நாகேஸ்வரன், பிரதேசசபை செயலாளர் கம்சநாதன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று மதிப்பீடுகளை மேற்கொண்டு இருந்தனர்.

இது தொடர்பில் தெரிவித்த அப்பகுதி மக்கள்,

இவ்வீதிகளையும், கால்வாய்களையும் புனரமைப்பதற்கு பெருந்தொகை நிதி தேவை என்பதை நாம் அறிவோம். ஆனால் மழை வெள்ளம் அணைக்கட்டை உடைத்துக் கொண்டு பல கனவடி நீர் கிராமங்களுக்குள் உட்புகுந்து வீதிகளையும், வளவுகளையும் நீர்மூலம் செய்து வருகின்றது.

இவ்விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நேரில் பார்த்து இருக்கின்றார் அதிகாரிகள் குழுவையும் அனுப்பி இருக்கிறார் எனவே விரைவில் ஆரம்ப புனரமைப்பு பணிகளாவது நடைபெறும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றோம் என்றனர்.

You might also like