புதிய கட்டிடத்திலிருந்து வவுனியா வர்த்தக சங்கத்தின் சேவைகள் ஆரம்பம்

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா வர்த்தக சங்கத்தின் தலைவர் சுஜன் சண்முகராஜா தலைமையில் இன்று (05.09.2018) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட வவுனியா , மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்கள் கலந்து கொண்டு வர்த்தக சங்கத்தின் பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் அலுவலத்தினை பிரதி பொலிஸ் மா அதிபருடன் இணைந்து வவுனியா நகரசபையின் தலைவர் இராசலிங்கம் கௌதமன் நாடா வெட்டி திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மகிந்த, நகரசபையின் உபதலைவர் சு.குமாரசாமி , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயுரன் , வவுனியா நகர பள்ளிவாசல் தலைவர் , வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் ,வவுனியா சிகையலங்கார சங்கத்தின் பிரதிநிதிகள் , வவுனியா அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் , வவுனியா வரிவிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , உள்ளுர் விலைபொருள் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநிதி நந்தன் , வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் , வர்த்தகர்கள் , சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் , பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வர்த்தக சங்கத்தின் நலனை கருத்தில் கொண்டு நாகா ஜீவலறி உரிமையாளரினால் பாதுகாப்பு கமராக்களும் , பேஸ்ட் செலக்சன் (BEST SELECTION) வர்த்தக நிலையத்தினரால் போட்டோ பிரதி செய்யும் இயந்திரமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

வர்த்தகர்களின் நலனை கருத்தில் கொண்டு  வவுனியாவில் வர்த்தகர்களுக்கு பொலிஸ் நிலையத்தினுடாக  தீர்க்கப்பட வேண்டிய முறைப்பாடுகளை வர்த்தக சங்கத்தின் ஊடாக அனுகும் பட்சத்தில் வர்த்தக சங்கத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் அதிகாரியின் மூலமாக விரைவாக தீர்வு பெற்றுத்தருவதாக வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  உறுதிமொழி வழங்கியதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

You might also like