பொலிஸாருக்கு அதிக இலஞ்சம் வழங்கும் இலங்கையர்கள் : சர்வதேச ஆய்வில் தகவல்

இலங்கை பொலிஸாருக்கு, அந்நாட்டு மக்கள் அதிகளவில் லஞ்சம் வழங்குவதாக ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள இன்டர்நெஷனல் டிரான்ஸ்பேரன்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடத்திய ஆய்வு அறிக்கைக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து கணிப்புகளின் படி,17 நாடுகளில் இலஞ்சம் பெறுவதில் இலங்கை 15 சதவீதத்தை பெற்றுள்ளது. பொதுமக்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு அடிக்கடி இலஞ்சம் கொடுத்து வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

பொது மக்கள் பாடசாலைகள்,நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்கு இலஞ்சம் கொடுத்து வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

”ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மக்களும் ஊழலும்” என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, இலங்கை, அவுஸ்திரேலியா, தாய்வான், ஜப்பான், ஹொங்கொங், தாய்லாந்து, சீனா, மியன்மார், தென் கொரியா, கம்போடியா, இந்தோனேஷியா, மங்கோலியா, மலேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய 7 நாடுகள் இந்த பட்டியிலில் இணைக்கப்பட்டுள்ளன.

ஹொங்கொங்,வியட்நாம், ஜப்பான், மங்கோலியா, மற்றும் மலேஷியா அரசாங்கங்கள் தங்கள் நாடுகளில் உள்ள ஊழல் தொடர்பில் போராடி வருகின்றனர்.

எனினும்,தங்கள் அரசாங்கம் ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றது என இந்தியா, இந்தோனேஷியா இலங்கை மற்றும் தாய்லாந்தில் வாழும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நாடுகளில் சில மக்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர், சிலர் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட நாடுகளில் உள்ள அரசாங்கம் ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டும் என இன்டர்நெஷனல் டிரான்ஸ்பேரன்சி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You might also like