5 மணித்தியால சுற்றிவளைப்பில் 1,141 பேர் அதிரடியாக கைது

நாடுமுழுவதும் பொலிஸாரால் 5 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட அதிரடிசுற்றிவளைப்பில் ஆயிரத்து 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் பொலிஸாரால்தேடப்படுபவர்கள், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் இதில் உள்ளடங்கியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பு நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும்மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக 11 ஆயிரத்து 792 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸமா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like