வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா!!

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா இன்று (06.09.2018) கல்லூரியின் அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுனரின் உதவி செயலாளர் எஸ்.இ.ஜெ.செல்வநாயகம் கலந்துகொண்டிருந்தார்.

அமரர்களான நல்லதம்பி பாக்கியம் ஆகியோரின் ஞாபகர்த்தமாக அவர்களின் உறவினர்களால் பத்து இலட்சம் ரூபா செலவில் ஓமந்தை மத்திய கல்லூரியின் நுழைவாயில் நிர்மாணிக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டது.

ஆலய வழிபாட்டுடன் அரம்பமாகிய நிகழ்வில் அதிதிகள் மாலை அணிவித்து பாண்டு வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டதுடன் பிரதம விருந்தினர் மற்றும் அதிதிகளால் நுழைவாயில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

நுழைவாயில் ஸ்தாபகர்களின் குடும்ப உறுப்பினர்களால் கல்லூரி நுழைவாயில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவ மாணவியருக்கு துவிச்சக்கர வண்டி, பாதணிகள், அப்பியாசப்புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதி கல்வி பணிப்பாளர் மாலதி முகுந்தன், தொழில் அதிபர் விஜியேந்திரரத்தினம், ஓமந்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சுரேஸ்ட சில்வா, பெற்றோர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like