வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளிகள் அவதி

02-98/.2017ம் இலக்க சுற்று நிருபத்தின் மூலம் தாதியர்கள் , நிறைவுகான் மற்றும் துணை மருத்துவ சேவைக்குரிய மேலதிக நேர கொடுப்பணவு அதிகரிக்கப்பட்டு இருந்தன .

இச் சுற்று நிருபத்தின் பிரகாரம் 07.01.2016 முதல் 31.12.2016 வரையான காலப்பகுதிக்கான மேலதிக நேர கொடுப்பனவு நிலுவை இது வரை கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து தாதியர்கள் நிறைவுகான் துணைமருத்துவ சேவையினருடன் இணைந்து இன்று (06.09.2018) ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெறும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் இடம்பெற்றது. இதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.

வைத்தியசாலையில் பல்வேறு சேவைகள் முடக்கப்பட்டிருந்த போதிலும் அவரச சிகிச்சைகளில் தாதியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

உரிய தீர்வு விரைவில் கிடைக்கவிடின் நாடாளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

You might also like