கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு லான்ட் மாஸ்டர் விபத்து : ஒருவர் காயம்

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு யாழில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த புகையிரதமும் லான்ட் மாஸ்டர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் வாகன சாரதி சிறு காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் நகர் பகுதியில் உள்ள கடவையை லான்ட் மாஸ்டர் வாகனம் கடக்க முற்பட்ட போது கடவையில் இருந்த சமிக்கை விளக்கு சரியாக வேலைசெய்யாமையால் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சமிக்கை விளக்கு சரியாக வேலைசெய்யாமையால் இவ் வாரத்திற்குள் இடம்பெற்ற இரண்டாவது விபத்து இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like