திருகோணமலை பீரங்கியில் சிக்கிய பாடசாலை மாணவியின் அவல நிலை

திருகோணமலைக்கு கல்வி சுற்றுலா சென்ற மாணவி ஒருவர் கடற்படை முகாமின் பீரங்கியில் சிக்கி விபத்துக்குள்ளாகி உள்ளார்.

கம்பஹா, ரத்னாவலி மகளிர் பாடசாலையில் 9ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளார்.

இதன்காரணமாக கடந்த மூன்று நாட்களாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கம்பாஹாவில் இருந்து திருகோணமலைக்கு பாடசாலை மாணவிகள் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த மாணவிகள் திருகோணமலை கடற்படை முகாமின் அருங்காட்சியகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் போது அங்கிருந்த பாரிய அளவிலான பீரங்கி ஒன்றை மாணவிகள் சிலர் தள்ளிவிட்ட நிலையில், மாணவி ஒருவர் அதில் சிக்கி காயமடைந்துள்ளார்.

அந்த சம்பவத்தின் பின்னர் கடற்படையினர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மாணவியை திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

குறித்த மாணவியின் கல்லீரல் மற்றும் எலும்புகளில் சிறிது காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினரின் கவனயீனத்தினால் இந்த சம்பவம் இடம்பெறவில்லை என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மாணவர்கள் சுற்றுலா பணம் செல்லும் போது ஆசிரியர்கள் அவதானத்துடன் செயற்பட்டால் இவ்வாறான விபத்துக்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like