வவுனியா வைரவர்புளியங்குளத்தில் மாணவிகளுடன் சேட்டை விட்ட சிங்கள இளைஞன் நையப்புடைப்பு

வவுனியா வைரவர்புளியங்குளம் 10ஒழுங்கை புளியடி வீதியில் பாடசாலை மாணவியுடன் தகாத முறையில் சேட்டை புரிந்த சிங்கள இளைஞன் பொதுமக்களால் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்

இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது,

வவுனியா ஈரற்பெரியகுளம் அவுசுது பிட்டியவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜானக்க 31 வயதானவரே நையப்புடைக்கப்பட்டவரவார்.

குறித்த இளைஞன் பல நாட்களாக குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களிற்கு முன் நின்று பெண்களுடன் சேட்டை விட்டு வந்துள்ளதாகவும் ஒரு சில பெற்றோர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் முறையிட்டும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 8.30 மணியளவில் வழமை போல் தனது மாணவியுடன் கைசேட்டை புரியும்போது பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like