சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரை போராட்டம் தொடரும்! கேப்பாப்புலவு மக்களின் அவலம்

எமது சொந்த நிலத்தில் கால்பதிக்கும் வரையும் இந்தப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என, கடந்த முதலாம் திகதி முதல் கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 12வது நாளாகவும் தொடர்கிறது.

இலங்கையின் வடபகுதியில் மிக நீண்டகாலமாக வரலாற்று ரீதியாக மக்கள் வாழ்ந்த பகுதிகளில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு காணப்படுகின்றது.

குறித்த கேப்பாப்புலவு மக்களின் காணிகள் வரலாற்று ரீதியாக தலைமுறை தலைமுறையாக ஆட்சி செய்யப்பட்ட காணிகள் என்றும் இது எங்களின் மூதாதையர்கள் எங்களுக்கு தந்த முதுசம், இது வேறு யாருக்கும் சொந்தமில்ல.

எங்களது காணிகளை தான் நாங்கள் கேட்கின்றோம். இதை தருவதில் இந்த நல்லாட்சிக்கு என்ன தடையுள்ளது என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் உள்ள 482 ஏக்கர்வரையான காணிகள் படையினர் வசம் தொடர்ந்து இருந்து வருகின்றது. இதனை விடுவிக்க வேண்டும்.

அதில் தங்கள் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் என கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்த மக்கள், தற்பொழுது இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நல்ல தொழில் வளம்கொண்ட நந்திக்கடலும் அதனுடன் இணைந்த வயல் வெளிகளிலும் கொண்ட அழகிய கிராமத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்விற்கு ஆதாரமாக கடற்தொழில்களும் விவசாயம் கால்நடை வளர்ப்பும் காணப்பட்டன.

கடந்த 2009ம் ஆண்;டுக்கு முன்னர் வருகை வருசாவருசம் வற்றாப்பளை அம்பாளின் பொங்கலுக்கு செல்லும் போது இந்த வீதியூடாக தான் செல்வது வழமை. புதுக்குடியிருப்பை தாண்டி வருகின்ற வயல் வெளியையடுத்து ஒரு குக்கிராமம் அக்கிராமத்தில் தான் பிலக்குடியிருப்பு அதனையடுத்து, பிரம்படி கேப்பாப்புலவு என அடுத்தடுத்து வற்றாப்பளை வரையும் செல்லும் போது வானுயர்ந்த தென்னைகளும் பனைகளும் பயன்பதரமங்களும் கொண்ட அழகிய கிராமமாகவே கேப்பாப்புலவு காணப்பட்டது.

இப்போது அந்த கிராமத்திற்குள் எவரும் நுழையாதவாறு பிலக்குடியிருப்புக்கு அண்மித்த பகுதியில் இருந்து வற்றாப்பளை வரையும் பிரதான வீதி மறிக்கப்பட்டு மாற்றுப்பாதையொன்று அமைக்கப்பட்டு கேப்பாப்புலவு கிராமத்தின் பின் புறமாகவே போக்குவரத்து பாதை அமைக்கப்பட்டு அதனூடாகவே இப்போது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகின்றன.

புதுக்குடியிருப்பு, வற்றாப்பைள வீதி முழுமையாக இராணுவத்தேவைக்கும் தென்பகுதி சுற்றுலாப்பயணிகள் போக்கவரத்துக்கள் மாத்திரமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவதுடன் குறித்த வீதி தற்போது புனரமைக்கப்பட்து வருகின்றன.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள் கடந்த 2008ம் ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் வரை சென்று பல பெறுமதி மதிப்பிடமுடியாத மனித உயிர்களையும் சொத்துக்களையும் இழந்த மக்கள் கடந்த 2009ம் ஆ ண்டு இறுதி யுத்தம் நிறைவு பெற்ற தன் பின்னர் மெனிக்பாம் கொண்டு சென்று முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டனர்.

படிப்படியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் மெனிக்பாமம் இடைத்தங்கல் முகாம் மூடவேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில்,

அப்போதைய அரசாங்கம் முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, மாத்தளன், வட்டுவாகல் ஆகிய பகுதி மக்கள் , புதுக்குடியிருப்பு நிம்பிலிவில் பகுதியில் 200 வரையான தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் குடியமர்த்தப்பட்டதுடன், படிப்படியாக அவர்களது நிலங்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் கேப்பாப்புலவு, சூரிபுரம், பிலக்குடியிருப்பு ஆகிய பகுதி மக்கள் மெனிக்பாம் முகாமிலிருந்து மீள்குடியமர்வு என்ற பெயரில் அழைத்து வரப்பட்டு சீனியமோட்டை பகுதியில் கால் ஏக்கருக்கும் குறைவான காணிகளில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு அதற்கு கேப்பாப்புலவு மாதிரிக்கிராமம் எனப்பெயர் சூட்டி அந்த மக்களை குடியேற்றியது.

அரசாங்கம் இதில் வாழும் மக்கள் கடந்த ஏழ வருடங்களுக்கு மோக சொந்தமாக எந்த தொழில்களும் இன்றி வாழ்வதற்கும் வசதியான வீடுகளும் இன்றியும் அவர்களது கலை கலாச்சாரம், பண்பாடுகளை சிதைக்கும் நடவடிக்கைக்கையாவே இது காணப்படுகின்றது.

இவ்வாறு வாழ்ந்து மக்களில் பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த ஜனவரி 31ம் திகதி முதல் மேற்கொண்ட தொடர்போராட்டத்தின் விளைவாக அவர்களது காணிகள் விடுவிக்கப்பட்டு இன்று அந்த மக்கள் தமது சொந்தக்காணிகளில் மீள்குடியேறியுள்ளர்.

கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் ஆகிய பகுதிகளில் படையினர் வசமிருந்த 528 ஏக்கர் காணிகளில் பிலக்குடியிருப்பு பகுதியில் 42 ஏக்கர் காணிகள் விடுவிகப்பட்டவை தவிர ஏஞ்சியுள்ள 486 ஏக்கர் காணிகளையும்

விடுவிக்குமாறு கோரியே இந்தப்போராட்டம் பன்னிரெண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாங்கள் எங்களது காணிகளைத்தான் கேட்கின்றோம். இராணுவத்தினரின் காணிகளை அல்லது வேறு யாருடைய காணிகளையும் கேட்கவில்லை. எங்கள் அப்பா, அம்மா, மூதாதையர் தேடி எங்களுக்குதந்த நிலத்தைத்தான் கேட்கின்றோம்.

நாங்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து அனைத்தும் இழந்து சென்று எங்களுடைய காணிகளை நம்பித்தான் அதில் பயிர்கொடி செய்து வாழலாம் என என்றே வந்தோம். எங்களை முகாமில் இருத்திவிட்டு வேடிக்கை பார்கின்றது.

இந்த அரசாங்கம் எனவே எங்களது நிலத்தை வழங்க சர்வதேசமும் நல்லாட்சி அரசும் முன்வரவேண்டும் என இந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிலத்திற்காக போராடும் மக்கள் இரவு பகலாக இராணுவ முகாமின் முன்வாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் தங்களுக்கு பல்வேறு விதமான அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் உள்ளபோதும் தாம், போராட்டத்தை கைவிடப்போதில்லை. எங்களது நிலம் இல்லாவிட்டால் நாங்க்ள உயிருடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதற்காக எவ்வாறு என்றாலும் நாங்கள் போராடியே தீருவோம் எனவும் தெரிவித்துள்னர்.

எனகவே கேப்பாப்புலவு மக்களின் காணிளை விடுவித்து அந்த மக்கள் தமது காணிகளில் சென்று வாழ்வதற்கான உரிமைகளை பெற்றுக்கொக்க பொறுப்புள்ள அரசாங்கம் முன்வரவேண்டும் என்தே இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.

 

You might also like