வவுனியா பாரதிபுரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நடந்தது என்ன?

வவுனியா பாரதிபுரம் 50 வீட்டுத்திட்டத்தில் நேற்று (08.09.2018) மாலை 4.30 மணியளவில் 21வயதுடைய இளைஞனோருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

21 வயதுடைய கௌரி சங்கர் என்ற இளைஞன் நேற்று மாலை அவரது உறவினர் வீட்டிற்கு பின்புறமாக காணப்படும் பாவனையற்ற வளவில் காணப்படும் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

அவ்விடத்தில் ஆடு மேய்க்க சென்ற நபரோருவர் இவ் சடலத்தினை பார்வையிட்டதுடன் உடனடியாக பொதுமக்கள், கிராம சேவையாளர் , பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தினை பார்வையிட்டதுடன் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்கள்.

வவுனியா பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடவியல் பொலிஸார் மரணம் தொடர்பான பகுப்பாய்வுகளை மேற்கொண்டனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையே தற்கொலைக்கு காரணமேன ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

4.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட இளைஞனின் சடலத்தினை இரவு 10.05 மணியளவிலேயே திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஸோர் பார்வையிட்டதுடன் கயிற்றினை வெட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

5 மணித்தியாளத்திற்கு மேலதிகமாக மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அங்கும் இங்குமாக அசைந்து கொண்டிருந்த இளைஞனின் சடலம் பாரதிபுரம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

You might also like