வவுனியாவில் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் பிடித்த பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த நபர்

வவுனியா கனகராயன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக நேற்று (11.09.2018) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்களை பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த இனந்தெரியாத நபரோருவர் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் பிடித்துள்ளார்.

இதனை அவதானித்த அங்கிருந்த நபரோருவர் நீங்கள் யாரேன வினாவிய சமயத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மிக அருகில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பொலிஸார் வவுனியாவிலிருந்து பேரூந்து மூலம் வரவளைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பொலிஸாரும் நடந்து கொண்டிருந்தனர்.

கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிவில் உடையில் சென்று இரண்டு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் மேல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதின் எதிரோலியாக இவ் போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like