கிளிநொச்சியில் கடும் மழை! தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் பெய்து கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு முப்பது மணி வரை தொடர்ச்சியாக கடும் மழை பெய்தது. வீதிகளில் வெள்ளம் நிரப்பி வழிந்ததோடு, பல கிராமங்களில் பல பகுதிகள் வெள்ளத்திலும் மூழ்கியது.

குறிப்பாக மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட ஒரு வருட ஆயுளை கொண்ட தற்காலிக வீடுகளில் வசித்த மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அத்தோடு காலபோக நெற் செய்கையின் அறுவடை தற்போது முழுமையாக நிறைவு பெறாத நிலையில் விவசாயிகள் பாதிப்புக்களுக்குள்ளாகியதோடு, அறுவடை செய்த நெல்லை உலர வைக்க முடியாது திண்டாடி வருகினன்றனர்.

You might also like