வவுனியாவில் ஏழையின் வாழ்வில் ஒளியேற்றிய சமூக அமைப்புக்கள்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடோன்று இன்று (13.09.2018) மதியம் 12.30 மணியளவில் தீப்பற்றியேறிந்தது.

நொச்சிமோட்டை பகுதியில் இரு பெண்களைகளும் ஒர் ஆண் பிள்ளையும் தாய் மற்றும் தந்தையும்  தற்காலிக மண் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

தந்தை கூலி வேலைக்கு காலை சென்றுள்ளார். இரு பிள்ளைகளும் பாடசாலைக்கு சென்றுள்ளனர். தாயார் வீட்டிற்கு அருகே காணப்படும் வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் கொள்வனவு செய்ய சென்றுள்ளார்.

இவர்கள் யாவரும் வீட்டில் இல்லாத சமயத்தில் குடிசை வீட்டில் திடீரேன மின்னேழுக்கு ஏற்பட்டு தீப்பற்றியேறிந்து உடனடியாக விரைந்த அயலவர்கள் உடனடியாக தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் ஒமந்தை பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இவ் தீ விபத்தின் காரணமாக இவர்களின் உடைகள் , உடமைகள் , பாடசாலை உபகரணங்கள் என்பன முற்றாக சேதமடைந்துள்ளது.

இதன் போது இவர்களின் நிலமைகளை அவதானித்த வவுனியா ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷன் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு தகவல் வழங்கியதுடன் வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களுக்கும் இவர்களின் நிலமையினை எடுத்துரைத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தீ விபத்தினால் சேதமடைந்த வீட்டினை பார்வையிட்டதுடன் நிவாரணம் வழங்குவதாகவும் வாக்குறியளித்தார்.

தமிழ் விருட்சம் அமைப்பினரினால் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியும் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர், ஸ்ரீ அம்பாள் மோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களினால் பாடசாலை சப்பாத்து , பாடசாலை உபகரணங்கள் , பாடசாலை சீருடை , புத்தகப்பை , பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான உடைகள், அத்தியாவசிய பொருட்கள் என பல பொருட்கள் வழங்கி வைத்தனர்.

மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் அவர்களின் வேண்டுகோளிக்கினங்க வவுனியா மாவட்ட செயலகத்தினால் தறப்பால் , துவாய், நுளப்பு வலை , சாறி , ரவல் போன்றவற்றையும் வழங்கி வைத்தனர்.

இவ் தீவிபத்து ஏற்பட்டு பல உடமைகள் சேதமடைந்துள்ள போதிலும் இது வரையும் நொச்சிமோட்டை கிராமத்தின் கிராம அலுவலகர் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொள்ளவில்லை

வவுனியாவிலிருந்து பல அமைப்புக்கள் எமது நிலமையினை நேரடியாக அவதானித்து எமக்கு உதவிகளை வழங்கிய போதிலும் எமது கிராமத்தின் கிராம சேவையாளர் எமது நிலமையினை இது வரை வந்து பார்வையிடவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மன வேதனையுடன் தெரிவித்தனர்.

You might also like