வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம்

வவுனியாவில் இன்று (13.03.2017) காலை 8.30மணியளவில் வைத்தியசாலை சுற்றுவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நினைவுத் தூபியில் திருவள்ளுவர் குருபூசை தினம் இடம்பெற்றது.

நகரவரியிறுப்பாளர் சங்கம், தமிழ் விருட்சம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தலைவர் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்றது. ஜேர்மன் நாட்டின் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் வைத்தியர்கள், தாதியர்கள் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்தது விஷேட அம்சமாக இடம்பெற்றது.

தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு. சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், முன்ளாள் நகர உப பிதா சந்திரகுலசிங்கம், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை மாணவ, மாணவிகள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு மலர் தூவி குருபூசை தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

You might also like