தமிழர் உடல்களை 2 மணிநேரமாக குதறிய காடையர்கள்! தலையிட மறுத்த காவற்துறை!!

வெலிக்கடை சிறைப்படுகொலைகள் இடம்பெற்றவேளை சிறிலங்காகாவற்துறை தலைமையகத்துக்கு இவ்வாறான ஒரு படுகொலை சிறையில் இடம்பெறுவது நன்றாகத் தெரிந்திருந்தது.

இதுகுறித்து சிறிலங்கா காவற்துறையின் தொலை தொடர்புசேவையில் பதிவு இருந்தமைக்கான ஆதாரம் பின்னர் வெளிப்பட்டிருந்தது.

சவுத்-2 என்ற தொடர்பாடல் முனை சவுத் 1 என்ற தொடர்பாடல் முனையுடன் பேசிய செய்தி இதனை பகிரங்கமாக்கியது.படுகொலை இடம்பெற்றபோது நடந்த உரையாடலின் தமிழாக்கம்இதுதான்;….

சவுத்2 இல் இருந்து சவுத் 1 க்கு … வெலிக்கடை சிறையில்கடுமையான சம்பவங்கள் இடம்பெறுவதாகதகவல் வந்துள்ளது!… என்ன செய்யலாம்?

சவுத்1 …இல் இருந்து சவுத் 2 க்கு (பதில்) ….. வெலிக்கடை சிறை படையினரின் கட்டுப்பாட்டுக்குள்வருவதால் இதில் தலையிடத்தேவையில்லை. தலையிட்டால்பின்னர் இதில் சிக்கல் வரும்!

சவுத்2 இல் இருந்து சவுத் 1 க்கு…. அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது…ரொஜர்.. ஒவர்!

சிறிலங்காகாவற்துறை வானொலி தொடர்பு சேவையில் பதிவில் இருந்த இந்த ஆதாரம் பின்னர் அழிக்கப்பட்டதாகவும்தகவல்

இந்தநிலையில் தான் சிறையின் முதற்கட்டப்படுகொலைகள் குறித்த வாக்கு மூலங்களை பதிவு செய்வதற்குசிறிலங்காவின் முதன்மை நீதிபதி அன்றிரவே சிறைக்குச்சென்றிருந்தார்.

ஆனால்அதே சமகாலத்தில் தான் சிறையின் இன்னொரு பகுதியில் இரண்டாவது கட்ட படுகொலைக்கான திட்டங்கள்தீட்டப்பட்டுக்கொண்டிருந்தன.

இந்தநிலையில் கிளிநொச்சி வங்கிக் கொள்ளை வழக்கின் முதலாம் எதிரியான  ஞானசேகரனின் அறையின் முன்னால்; வந்து நின்ற நீதிபதி சிறையில் அன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து;சாட்சி சொல்ல விரும்புகிறீர்களா? என அவரிடம் வினவினார்.

இந்தஞானசேகரன்தான்; பின்னாளில் ஈ. என.; டி .எல். எப் இயக்கத்தின் முக்கிய தலைவராகமாறியவர்.சிறிலங்கா படையினரால் சுட்டு காயப்படுத்தப்பட்டே

ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். படையினர் சுட்ட ரவை ஒன்று அவரது முள்ளந்தண்டில்; காயத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரது கால் சரிவர இயங்கவில்லை.

பின்னர்அவரை பரிசோதித்த இராணுவ மருத்துவர் அவரது வலது கால் இயங்காது என உறுதிப்படுத்தி மருத்துவ சான்றிதழை வழங்கியிருந்ததால் அதனைப் பயன்படுத்தி சிறிய ஊன்று கோல் ஒன்றை அவர் பெற்றிருந்தார்.

சிறை படுகொலைகள் குறித்து சாட்சி சொல்ல விரும்புவதாக

ஞானசேகரன் கூறியதும் அவரது அறையை திறக்கும்படி சிறை அதிகாரிக்கு சைகை காட்டினார் நீதிபதி.

அதன்பின்னர் தமிழ்கைதிகள் இருந்த ஒவ்வொரு அறையாகச் சென்று அவர்களும் சாட்சி சொல்ல விரும்புகிறார்களாஎன்பதை வினவிவிட்டு வந்தார்.

ஞானசேகரனின்அறை திறக்கப்பட்டது. அவர் தனது ஊன்றுகோலின் உதவியுடன் வெளியில் வந்தார். இந்த நகர்வுகளைஇதனைக்கண்ட இன்னொரு கைதியான தம்பாபிள்ளை மகேஸ்வரன்; தானும் சாட்சியம் சொல்ல விரும்புவதாகதாமதமாக கூறினார்.

தம்பாபிள்ளைமகேஸ்வரன் சாட்சியமளிக்க முன்வந்ததும் சிறைஅதிகாரிக்கு சீற்றம் வந்தது. முதலில் கேட்டவேளை பேசாமல் இருந்துவிட்டு இப்போதுஎதற்காக சாட்சிசொல்ல விரும்புகிறாய்? என தம்பாபிள்ளை மகேஸ்வரனை நோக்கி சீறினார் அவர்.எனினும் மகேஸ்வரனையும்; அழைத்து வரும்படி உத்தரவிட்டார் நீதிபதி.

இதனையடுத்துஞானசேகரன் மற்றும் மகேஸ்வரன் ஆகிய இருவருடனும் முதன்மை சிறைஅதிகாரியின் பணியகத்துக்குசென்றார் நீதிபதி.

வாசலில்போடப்பட்டிருந்த வாங்கில் இவரையும் அமரும்படி கூறிய அதிகாரிகள் இரவு பத்து முப்பதுமணியளவில் ஞானசேகரனின் பெயரைச் சொல்லி உள்ளே அழைத்தனர்.

உள்ளேபெரிய மேசை ஒன்று போடப்பட்டிருந்தது. ஆதில் ஒருபக்கம் முனையில் முதன்மை நீதிபதியும்தட்டெழுத்தாளரும் இருந்தனர். மற்றப்பக்கம் ஒரு ஒரு கதிரை போடப்பட்டு இருந்தது

அந்தகதிரையை சைகை மூலம் காட்டிய நீதிபதி அதில் அமரும்படி ஞானசேகரனுக்கு கூறினார்.

அந்தஅறையில்அரசு தரப்பின் சட்டவாளராக திலக் மாரப்பன இருந்தார்.

இவர் வேறுயாருமல்ல தற்போது சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக இருக்கும் இதே திலக் மாரப்பனதான்அவர். அன்று அவர் சிறிலங்காவின் சட்டமாஅதிபர் திணைக்களத்தில் பிரதி சட்டமா அதிபர்களின்ஒருவராக பணியாற்றியவர்.

குட்டிமணிக்கும் தங்கத்துரைக்கு தூக்குத் தண்டனை வழங்கவேண்டும் என அரசு தரப்பின் சட்டவாளராக சுற்றிச்சுழன்று அன்று நீதிமன்றத்தில் மும்முரமாக வாதாடியவர் திலக் மாரப்பன.

இந்த சந்தர்ப்பத்தில் ஞானசேகரனைப் பார்த்த நீதிபதி வாக்கு மூலத்தின் பதிவை ஆரம்பிக்கலாமா? என வினவினார்.

இந்தசந்தர்ப்பத்தில் திலக் மாரப்பனவை சுட்டிக்காட்டிய ஞானசேகரன் அவரை அறையிலிருந்து வெளியே அனுப்பினால் மட்டுமே தான்வாக்கு மூல பதிவை வழங்குவேனென நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

ஞானசேகரனின் இந்த கோரிக்கையை நீதிபதி எதிர்பார்க்கவில்லை. அவர் திலக் மாரப்பனவின் முகத்தைப்பார்த்தார் எதுவும் பேசாமல் எழுந்து வெளியே சென்றார் திலக்மாரப்பன.

மீண்டும் ஞானசேகரன் அறையில் இருந்த சிறைஅதிகாரகளைப்பார்க்க அதனை. விளங்கிக்கொண்ட நீதிபதி, அவர்களையும்வெளியே செல்லும்படி பணித்தார்

அவர்களும் வெளியேறினர் நீதிபதியும் தட்டெழுத்தாளரும் மட்டும் அந்த அறையில் இருந்தனர். மீண்டும் ஞானசேகரனை நோக்கிய நீதிபதி இப்போது ஆரம்பிக்கலாமா, என்றார்.

மீண்டும் ஒரு பிரச்சனையை சொன்னார் ஞானசேகரன். தான் சாட்சியமளித்துவிட்டு அதே சிறைஅறைக்குச் சென்றால் கொலையாளிகள் மீண்டும் தன்னை படுகொலை செய்யலாமென்றஅச்சத்தை வெளியிட்டார் அவர்.

அத்துடன் தமிழ் அரசியல்; கைதிகள் அனைவரையும் வேறு சிறைச்சாலைக்கு மாற்றினால் மட்டுமே தான் சாட்சியம் சொல்வதாகவும் ஞானசேகரன் கூறினார்.

ஞானசேகரின் இந்த கோரிக்கையையும் நீதிபதி எதிர்பார்க்கவில்லைசற்று யோசித்தார். ஆதன்பின்னர்

சிறைச்சாலைமாற்றம் குறித்து தன்னால் ஒன்றுசெய்ய முடியாதென்றவர் வேண்டுமானால் இந்தப் பிரச்சினையைஅரச தலைவர் ஜெயவர்த்தனாவிடம் எடுத்துச் சொல்வதாக கூறினார்.

பின்னர்எழுந்து வெளியே சென்ற நீதிபதி முதன்மை சிறை அதிகாரியை மீண்டும் உள்ளே அழைத்தார்.

உள்ளேவந்த அவரிடம் பேசிய நீதிபதி சிறைவளாகத்தில் வேறு தனியான இடம் ஏதாவது இருக்கிறதா எனவிசாரித்தார்.

நீதிபதியின்வினாவுக்குப் பதிலளித்த முதன்மை சிறை அதிகாரி செக்கிறிகேசன் (Segregation) பகுதி மட்டும்அவ்வாறு தனியாக இருப்பதால் வேண்டுமானால் அதனை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டார்.

ஆனால் அதே செக்கிறிகேசன் பகுதிதான் மறுநாள் பெரும்படுகொலைக் களமாக மாறப்போவதை நீதிபதி அப்போது அறிந்திருக்கமாட்டார்.

இதனையடுத்து ஞானசேகரனைநோக்கிய நீதிபதி, தற்போது இருக்கும் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு இன்று இரவே அவரை மாற்ற உடன்பட்டதுடன் சாட்சியம் தரவேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

ஞானசேகரனின் பெயர் முகவரி ஆகியன தட்டச்சில் பதிவு செய்யப்பட்டவுடன் அன்று நடந்த சம்பவங்களை நேரில்பார்த்தீர்களா? என்ற முதல் வினாவுடன் வாக்குமூலப்பதிவை ஆரம்பித்தார் நீதிபதி.

 

You might also like