வவுனியாவில் வெடிக்காத நிலையிலிருந்த ஷெல் மீட்பு

வவுனியாவில் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஷெல் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஷெல் உலுக்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து காணியின் உரிமையாளரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காணியின் உரிமையாளர் தனது காணியினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மண்ணில் புதையுண்ட நிலையில் 60 மில்லி மீற்றர் ஷெல்லினை கண்டுள்ளார்

இதனைத் தொடர்ந்து அவர் விடயம் தொடர்பில் உலுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறையிட, அதனையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கி, நீதிமன்ற அனுமதியுடன் இன்று காலை அதனை செயலிழக்கச் செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like