வவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானவர்களின் விபரங்கள் வெளியானது

வவுனியா பன்றிகெய்தகுளத்தில் நேற்று (16.09.2018) காலை புகையிரதத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாகனத்தின் சாரதி, வாகனத்தின் பயணித்த சிறுவன் எவ்வித காயங்களுமின்றி உயிர்பிழைத்துள்ளனர்.

இவ் விபத்தில் சுவீடன் நாட்டின் பிரஜையான கமலநாதன் சிவரஞ்சனி (வயது-30) , நெடுந்தீவு மேற்கை சேர்ந்த காண்டீபன் யமுனா ரஞ்சனி (வயது-32) , இசை ஞானவதி யோகரத்னம் (வயது-56) , காண்டீபன் டிசாலினி (வயது-13) ஆகியோரே உயிரிழந்ததுடன் சுவீடன் நாட்டின் பிரஜையான ஜேம்ஸ் கமலநாதன் ( வயது-34) , கமலநாதன் ஜெசிகா (வயது-6) ஆகிய இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புகையிரதம் வருகிறதென எச்சரித்தும் சாரதி மாமா காரை செலுத்தினார். கதவை திறந்து பாய்ந்து தப்பினேன் என விபத்திலிருந்து தப்பிய சிறுவன் சாட்சியம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் விபத்து தொடர்பாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like