காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் 22வது நாளாகவும் தொடர்கிறது

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும், இதுவரை அவர்களுக்கான தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை.

இதேவேளை, கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு 22 வது நாளாகவும் இன்று திங்கட்கிழமை தொடர்கின்றது.

You might also like