வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் முயற்சி

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று (18.09.2018) காலை 5.00 மணியளிவில் இ.போ.ச சாரதி மீது மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மதீனா நகரிலிருந்து வவுனியா இ.போ.ச சாலைக்கு கடமைக்காக மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் போக்குவரத்து சபையின் தலைவரும் வவுனியா சாலையின் சாரதியுமான ஏ.ஆர் பசிர் (வயது-34) மீது பூந்தோட்டம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் வழிமறித்து தனியார் பேரூந்துக்கு எதிராகவா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றாய் என தெரிவித்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த நிலையில் குறித்த இ.போ.ச ஊழியர் அவர்களிடமிருந்து தப்பித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவ தொடர்பான முறைப்பாடுகளை வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர்.

You might also like