இ.போ.ச அரச பேருந்தினரின் செயற்பாடு. பயணிகள் விசனம்.

மன்னாரிலிருந்து வவுனியாவிற்கு (10.03.2017) பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படவிருந்த வவுனியா இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தில் நடந்த சம்பவம்

வவுனியா செல்வதற்காக இ.போ.ச பேருந்து தயாரான வேளையில் பயணிகள் அமர வேண்டிய ஆசனத்தில் முல்லைத்தீவுக்குரிய வழிப்பதாதை இருவருக்குரிய ஆசனத்திலும் ஒரு லீட்டர் வெற்று தண்ணீர் போத்தல்கள் சில ஆசனங்களிலும் 5 லீட்டர் வெற்று தண்ணீர் போத்தல்கள் சில ஆசனங்களிலும்  அருகருகே இரு ஆசனங்களிலும் இருந்தன.

ஒரு பெரியார் மட்டும் தனது பணப்பையை ஓர் ஆசனத்தில் வைத்துவிட்டு வெயில் காரணமாக மறு பக்கத்தில் அமர்ந்திருந்தார். மற்றும் இரண்டு பயணப்பைகளும் காணப்பட்டன.

பயணிகள் வரத்தொடங்கியதால் நடத்துனரும் பயணச்சீட்டினை கொடுத்து கொண்டிருந்தார். இரு வெற்று  போத்தல்கள் மற்றும் முல்லைத்தீவு வழிபதாதை இருந்த ஆசனத்தில் ஒருவரும் அமரவில்லை.

பயணிகள் அமர வேண்டிய ஆசனத்தில் இவைகளும் அமர்ந்து இடம் பிடித்தால் நாளை இருக்கைகளில் இரும்புக்கம்பிகள் , ஆயுத உபகரணங்கள் உரிமை கோரி அமர்ந்திருக்கும். என பாதிக்கப்பட்ட பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தங்கள் ஆதங்கங்களை தெரிவித்தனர்.

முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் பிரச்சினையே என்னும் முடிவுக்கு வரவில்லை.  ஆனால் இங்கு முல்லைத்தீவு பதாதைகள் நவீன முறையில்  ஆக்கிரமிப்புக்கள் தீர்வு தான் என்ன?

இப்படியாக அரச சேவையில் பணி புரிபவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இடம் எடுத்து கொடுப்பதற்காக இப்படியாக நடந்தால் நாங்கள் எப்படி பயணத்தை மேற்கொள்வது நின்றபடியாக தான் பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம் .

You might also like