வவுனியாவில் வறட்சியை போக்க இன்றும் மதியம் முதல் இடியுடன் கூடிய கடும் மழை!!

வவுனியாவில் இன்று (13.03.2017) மதியம் 2.00மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

வவுனியா நகரம் , பட்டானீச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற வவுனியாவில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.

இதனால் வீதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்ப்பதுடன் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் வவுனியா திருநாவற்குளம் மக்களின் வீடுகளுக்கு வெள்ள நீர் உற்புகும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

You might also like