ஒமந்தை மாளிகை கிராம அலுவலர் பிரிவில் சிறுவர் கழகம் அங்குரார்ப்பணம்

வவுனியா ஒமந்தை மாளிகை நொச்சிகுளம் கிராமத்தில் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைய கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரனின் தலமையில் இன்று (18.09.2018) மாலை 3.30 மணியளவில் சிறுவர் கழகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது

இந் நிகழ்வில் நொச்சிக்குளம் கனிஷ்ட உயர்தரம் பாடசாலை அதிபர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரகாஷ் நொச்சிக்குளம் கிராம சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது இக் கழகத்தின் தலைவராக வினுசிகா, செயலாளராக வி.தர்சிகா , பொருளாளராக ச.புவிதரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவசர நோயாளர் காவு வண்டி சேவை (1990) பற்றிய விழிப்புணர்வு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது.

You might also like