பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற இளைஞன் கைது

ஹட்டன், வட்டவல, ரொசெல்ல, மாணிக்கவத்தை பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக கூறி, கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இளைஞனுக்கு உதவிய அவரது நண்பனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் பிரதேசத்தில் இருந்து மாணவியை சில வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தொலைபேசி தொடர்பு மூலம் சந்தேக நபருக்கும் பாடசாலை மாணவிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 23ஆம் திகதி பாடசாலை மாணவி காணாமல் போனதாக அவரது பெற்றோர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர், பாடசாலை மாணவியை நண்பர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்து விட்டு, கொட்டகலை பிரதேசத்தில் தலைமறைவாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். பாடசாலை மாணவி, சந்தேக நபரின் நண்பரும் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

மாணவியை நாவலப்பிட்டி சட்டவைத்திய அதிகாரி அனுப்பி பரிசோதித்து அறிக்கையையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like