வவுனியாவில் வீதியிலிருந்து தனியார் உள்ளூர் பேரூந்துகள் சேவையில் : மக்கள் அசௌகரியம்!

வவுனியாவில் தனியார் பேரூந்துகளின் வெளி மாவட்ட , மாகாணங்களுக்கான சேவைகள் இன்றைய தினம் (19.09.2018) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. 

இந் நிலையில் வவுனியா இலுப்பையடி பகுதியில் வீதியிலிருந்து தனியார் உள்ளூர் சேவைகள் இடம்பெற்று வருகின்றன . இதன் காரணமாக புதிய பேரூந்து நிலையத்திற்கு பொதுமக்கள் சென்று ஏமாற்றமடைந்த நிலையில் இலுப்பையடி சந்திக்கு வருகின்றனர்.

நான் புதிய பேரூந்து நிலையத்திற்கு முச்சக்கரவண்டிக்கு 100 ரூபாய் கொடுத்து சென்றேன் . அங்கு இல்லை இலுப்பையடிக்கு செல்லுமாறு தெரிவித்தனர். மீண்டும் அங்கிருந்து முச்சக்கரவண்டிக்கு 80 ரூபாய் வழங்கியே வந்தேன். வவுனியாவிலிருந்து நெளுக்குளத்திற்கு முப்பது ரூபாய் பேரூந்து கட்டணம் ஆனால் முச்சக்கரவண்டிக்கு 180 ரூபாய் செலவு. இலுப்பையடியிலிருந்து தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதாயின் புதிய பேரூந்து நிலையம் எதற்கு என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

You might also like