வவுனியாவில் இ.போ.ச பேரூந்து நடத்துனரின் மீது தாக்குதல் நடத்திய தனியார் பேருந்து உரிமையாளருக்கும், சாரதிக்கும் நேர்ந்த கதி!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கடந்த (16.09.2018) அன்று இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேரூந்தின் நடத்துனர் ,சாரதி மற்றும் பேரூந்தின் உரிமையாளரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இவ் தாக்குதலில் காயமடைந்த இ.போ.ச பேரூந்து நடத்துனர் எஸ்.தயாபரன் (வயது 28) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில்  தனியார் பேரூந்தின் நடத்துனர் , சாரதியினை நேற்று முன் தினம் (17.09.2018) வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆயர்படுத்திய போது எதிர்வரும் 01.10.2018 வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து தனியார் பேரூந்தின் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டுமேன தெரிவித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா, முல்லைத்தீவு , களவாஞ்சிக்குடி மாவட்ட இ.போ.ச பேரூந்துகள் நேற்று முன்தினம் (17.09.2018) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (18.09.2018) அதிகாலை தனியார் பேரூந்தின் உரிமையாளர் சரணடைந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபையினர் அவர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

தனியார் பேரூந்தின் உரிமையாளரை நேற்றைய தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்திய சமயத்தில் எதிர்வரும் 02.09.2018ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்துகளின் வெளிமாகாண சேவைகள் நேற்று (18.09.2018) மதியம் முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததுடன் இன்றைய தினம் வெளிமாவட்ட தனியார் பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like