இராணுவ முகாமில் இளைஞர் மரணம் : இரண்டு வருடங்களுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு

கண்டி – தியத்தலாவ இராணுவ முகாமில் பயிற்சி நேரத்தின் போது உயிரிழந்த இளைஞரின் சடலம் இரண்டு வருடங்களுக்குப்பின் மீண்டும் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குறித்த இளைஞரின் இரண்டாவது பிரேதபரிசோதனை அறிக்கைகளுக்கு அமையவே சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

சடலத்தை தோண்டி எடுக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் டீ.ஏ. ருவன் பத்திரன உத்தரவிட்டுள்ளார்.

தியத்தலாவ இராணுவ முகாமில் பயிற்சி பெற்று வந்த இளைஞர் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி உயிரிழந்தார்.

பிரேதபரிசோதனை அறிக்கைகளின் படி, இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு பின்னர், இந்த வழக்கு மீண்டும் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இளைஞரின் சடலத்தை தோண்டி எடுக்குமாறு நீதவான் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

You might also like