வீட்டில் இருந்து வெளியில் வருமாறு கூறி போத்தலால் தாக்குதல் : யாழில் சம்பவம்

வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகனை வெளியில் அழைத்து போத்தலால் தாக்கிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் வல்லிபுரம் சிங்கை நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியில் கூப்பிட்ட சிலர் இவர்களை போத்தலினால் தாக்கிவிட்டு ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதன் போது படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் கடந்த வாரமளவில் மந்திகைப் பகுதியில் வைத்து வர்த்தகர் ஒருவரை மூவர் அடங்கிய ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு ஓடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like