323 பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கை : ஒரே நாளில் 124 பேர் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் 323 பொலிஸார் பங்கேற்று குறித்த வேலைத்திட்டத்தை இன்று அதிகாலை முன்னெடுத்திருந்தனர்.

இதில் 951 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதுடன், 498 நபர்களை சோதனைக்கு உட்படுத்தியதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தேடுதலில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இருவர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 20 பேர், போதைப்பொருளுடன் 5 பேர், மற்றும் சிறு குற்றச்செயல்களுடன் 97 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் பீதியில் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like