கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி இத்தாவிலில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இத்தாவில் கிராமத்தில் நேற்றுதிங்கட்கிழமை 25 குடும்பங்களிற்கு வீட்டுத்திட்டங்களிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த திட்டத்திற்கான அடிக்கல் நேற்று பிற்பகல் 5 மணியளவில் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் காணி இல்லாது இருந்த மக்களிற்கு 4 பரப்பு காணி வழங்கப்பட்டு வீட்டுத்திட்டமும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

You might also like