இலஞ்சம் பெற்ற அரச அதிகாரியொருவருக்கு 10 வருட சிறைத் தண்டனை
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்ட அநுராதபுரம் மாவட்ட தொழிலாளர் காரியாலயத்தில் சேவை புரிந்து வந்த அதிகாரியொருவருக்கு ரூபாய் 35 ஆயிரம் அபராதமும், 10 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன் அது தொடர்பான வழக்கு, விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு வெதுப்பக உரிமையாளர் ஒருவரிடம் ரூபாய் 25 ஆயிரம் இலஞ்சம் பெற்று கொண்டமை அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு ஆகும்.