மனைவியை தாக்க வந்த இளைஞன், ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி பலி

மனைவியை தாக்குவதற்காக வந்த நபர் ஒருவர், ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி கிரியல்ல பஹலகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனைவியை தாக்கும் நோக்கில் கூரிய ஆயுதமொன்று மற்றும் அமில திரவம் அடங்கிய போத்தல் ஒன்றுடன் சென்றிருந்த போது பிரதேச மக்கள் குறித்த நபரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான 23 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குள் புகுந்த குறித்த நபர் மனைவியைத் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான மனைவி கூச்சலிடுவதனைக் கேட்ட உறவினர்களும் சுற்றத்தாரும் வீட்டுக்கு வந்து குறித்த நபரைத் தாக்கியுள்ளனர்.

குறித்த நபர் தாக்கப்படுவதாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like