வவுனியாவில் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு!!

யாழ் பல்கலைக்கழக மாணவி தே.சுரேக்காவின் ‘மழை தருமோ என் தேசம்’ எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (22) மன்னா பத்திரிகை ஆசிரியர் அருட்பணி லக்கசன் டி சில்வா தலைமையில் இறம்பைக்குளம் மறைக்கோட்ட நடு நிலையத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை விரிவுரையாளர் க.கவிந்தன் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அதிதிகளால் ‘மழை தருமோ என் தேசம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கவிதை நூல் வெளியீட்டை தொடர்ந்து தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் நூல் ஆசிரியரை பொன்னாடை போர்த்தி கௌரவித்து உரையாற்றிய அவர் தமிழ் விருட்சம் அமைப்பானது படைப்புக்கள், ஆக்கங்கள் மென்மேலும் வளர்ச்சியடை வேண்டும் என்பதற்காக  படைப்பாளிகளையும் கலைஞர்களையும் கௌரவித்து ஊக்கவித்து வருகிறது என தெரிவித்தார்.

நிகழ்வில் பங்குத்தந்தை அருட்பணி இராஜநாயகம், வவுனியா சுகாதாரத் திணைக்களம் வைத்தியர் முத்துக்குமார் மதிதரன், அருட்தந்தை லக்கோன்ஸ் பிகராடோ, மடு பிரதிகல்விப் பணிப்பாளர் ஆனந்தன் லோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like