வவுனியாவில் கிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் இறுதி ஊர்வலம் : நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பு

காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இறுதி ஊர்வலத்தின் அவ் கிராம பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமோன்றும் இடம்பெறுவதாக அங்கிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சிறிரேலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா , வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயுரன் , திருகோணமலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் , ஊழியர்கள், மாணவர்கள் , தமிழ் விருட்சம் அமைப்பினர் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் , அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்களின் கண்ணீருக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் மையானத்தினை நெருங்கி சென்று கொண்டிருக்கின்றது.

குறித்த பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் உறவினர்கள் எவரும் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை குறித்த பெண் மூன்று மாத கர்ப்பிணி என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like