பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பதினோராவது நாளாக தொடர்கிறது
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 11வது நாளாகவும் தொடர்கிறது.
காணி அனுமதி பத்திரம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த இப்போராடத்திற்கு சம உரிமை இயக்கம், சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்பன தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.