வவுனியா பூந்தோட்டத்தில் வீட்டிற்குள் நுழைந்த முதலை மடக்கிப் பிடிப்பு!

வவுனியா பூந்தோட்டம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த முதலை ஒன்றினை அப்பகுதியிலுள்ளவர்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

வவுனியா பூந்தோட்டம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (25.09.2018) இரவு 8.30மணியளவில் முதலையொன்றின் நடமாட்டம் தென்பட்டுள்ளது. வீட்டு நாயின் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே சென்று பார்வையிட்ட போது முதலை வீட்டின் வாயிலில் நின்றுள்ளது.

அதனையடுத்து வீட்டு உரிமையாளர் முதலையினை மடக்கிப் பிடித்து மரத்தில் கயிற்றினால் கட்டி வெளியே செல்லாதவகையில் கட்டி வைத்துள்ளார். இதனால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு இன்று (26.09.2018) காலை சென்ற பூந்தோட்டம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சுமார் 6 அடி நீளமான முதலையினை பார்வையிட பொதுமக்கள் திரண்ட வண்ணமாகவுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக குளங்களின் நீர் மட்டம் இன்றி முதலைகள் வெளியேறி வீடுகளை நோக்கியும், வயல்களை நோக்கியும் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது.

You might also like