வவுனியாவினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துப்பாக்கிகள் வழங்கி வைப்பு

வவுனியா பகுதியில் அதிகரித்துள்ள குரங்குத் தொல்லைகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு நேற்றைய தினம் (25.09.2018) துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குரங்களினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக மக்கள் தொடர்ச்சியாக முறைபாடுகளை முன்வைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அதற்கு தீர்வை வழங்கும் வகையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் துப்பாக்கிகளை வழங்கி வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு வவுனியா விவசாய திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது குரங்குகளை கலைக்ககூடிய வகையிலான துப்பாக்கிகளையே விவசாய இளைஞர் கழகத்தின் பிரதிநிதிகளிடம் அவர் கையளித்துள்ளார்.

அந்தவகையில் குரங்களிடமிருந்து மக்களின் பயிர்ச்செய்கைகளை பாதுகாப்பதற்காகவே அவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கினோம் என இதன்போது அவர் தெரிவித்தார்.

You might also like