வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் கல்வி நிர்வாக சேவையில் முதலாம் தரத்திற்கு பதவியுயர்வு

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் அவர்கள் கல்வி நிர்வாக சேவையில் இரண்டாம் தரத்திலிருந்து முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு கிடைக்கப் பெற்றமையடுத்து இன்று (26.09.2018) காலை 8.30 மணியளவில் கௌரவிப்பு இடம்பெற்றது.

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாலையணிவித்து பொண்ணாடை போர்த்தி ஊர்வலமாக வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலத்திற்கு அழைத்து வரப்பட்டு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இவ் கௌரவிப்பு நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் , கோட்டக்கல்வி பணிப்பாளர் , உதவிக்கல்வி பணிப்பாளர் , ஆசிரியர் ஆலோசகர்கள், ஆசிரிய வளவாளர்கள் , கணக்காளர் , முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் , ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like