இறந்த அம்மாவை கட்டிப்பிடித்துக் கதறி அழுத குட்டிக் குரங்கு: நெஞ்சை உருக வைக்கும் வீடியோ

தமிழக எல்லையில் குட்டி குரங்கு ஒன்று இறந்த தாயை கட்டியணைத்து கதறி அழுத சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை உருக வைத்துள்ளது.

தமிழ்நாடு -கர்நாடாகா நெடுஞ்சாலையிலே இச்சம்பவம் நடந்திருக்கிறது.

சாலையைக் கடக்க முயன்ற குரங்கு ஒன்று வேகமாக வந்த காரில் சிக்கி சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளது.

இதைப் பார்த்த குட்டிக் குரங்கு உடனே அம்மா குரங்கை நோக்கி ஓடி வந்தது. இறந்து கிடந்த அம்மாவின் காதில் எதோ கிசுகிசுத்தது. எந்த அசைவும் இல்லாததால் பயப்படத் தொடங்கியது.

தாய்க்குரங்கின் மார்பின் மீது காது வைத்து கேட்டது. பின், அம்மாவை கட்டிப்பிடித்துக் கொண்டது குட்டி. அங்கு கூடியிருந்தவர்கள் இந்தச் சம்பவத்தை கண்டு நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

பின், குட்டியை அம்மாவிடம் இருந்து விலக்கி, இறந்த அந்தக் குரங்கை புதைத்திருக்கிறார்கள். அப்போதும் குட்டி குரங்கு மரம் விட்டு மரம் தாவி அம்மாவை நோக்கியே ஓடி வந்துள்ளது.

குறித்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி அனைவரையும் உருக வைத்துள்ளது.

https://youtu.be/IKJlxYbuDdA

You might also like