மது உற்பத்தியில் ஈடுபட்ட பாடசாலை சிற்றூண்டிச்சாலையின் உரிமையாளர் கைது

ஹிங்குரக்கொட நகரை அண்மித்த பிரபல பாடசாலையொன்றின் சிற்றுண்டிச்சாலையில் மது உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சிற்றூண்டிச்சாலையின் உரிமையாளர் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிற்றூண்டிசாலையில் 250 லீற்றர் சோடாவுடன் சில போத்தல்கள் மதுவும், மது உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட உபகரணங்களில் 200 லீற்றர் பீப்பாய் ஒன்றும், செப்புக்குழாய்களும், கேஸ் சிலிண்டரொன்றும் பெரிய கேஸ் அடுப்பொன்றும் உள்ளடங்குவதாகவும், இங்கு வடிக்கப்படும் மதுபோத்தல்களிலும் கேன்களிலும் அடைக்கப்பட்டு இப்பிரதேசத்திலுள்ள பெண்ணொருவருக்கு மொத்த வியாபாரமாக அனுப்பிவைக்கப்படுவதாகவும் விசாரணைகளின்போது தெரியவருகின்றது.

சந்தேகநபர் இந்தப் பாடசாலையின் பழைய மாணவர் எனவும், 25 வயதான அவர் நீண்டகாலமாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக கலால் திணைக்களத்தின் விசேட விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி பீ.எஸ்.ஹேமந்த கூறியுள்ளார்.

மேலும், கலால் திணைக்களத்தின் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி ஹிங்குரக்கொட மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

You might also like